விசாகப்பட்டினம்: மலேசியாவில் தவித்த 185 இந்திய மாணவர்கள் இன்று ஏர் ஆசிய விமானம் மூலம் விசாகபட்டினம் வந்திறங்கினர்.
மலேசியாவில் 600-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 2 பேர்பலியாகியுள்ளனர்.இந்நிலையில் பிலிப்பைன்சில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், அங்கு படித்து வரும், தமிழக மாணவர்கள் உட்பட 200 இந்திய மாணவர்கள் மலேசியா வழியாக இந்தியா வர முடிவு செய்து கிளம்பி மலேசியா கோலாலம்பூரில் வந்திறங்கினர்.